மேலோட்டம்


மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள், சட்ட மசோதாக்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களுக்கு இணங்க, "வளமான சமுதாயத்தை" உருவாக்குவதற்கான மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் உதவுதல். கட்டளைகள் மற்றும் செயல்படுத்துதல், தேசிய பாதீடு, அரச முதலீடு மற்றும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள செயற்றிட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் பணிகளை அமுல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்

பெண்கள் தேசிய குழு

இலங்கை மகளிர் பணியகம்

வர்த்தமானியின் படி சிறப்பு முன்னுரிமைகள்

1. அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் தேசிய கொள்கைகள் மற்றும் "வளமான மற்றும் செழிப்பான நாடு" என்னும் கொள்கை அறிக்கையின்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் நிரல் II அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள திணைக்களங்கள், நியதிச்சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் வரும் விடயப்பரப்புடன் தொடர்பான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்களை உருவாக்குதல், அமுலாக்குதல், கண்காணித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் அமைச்சின் கீழ் உள்ள பொது சேவைகளை வினைத்திறனாக மற்றும் மக்கள் நேயமாக வழங்குதல்

2. நவீன முகாமைத்துவ உத்திகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து முறைமைகளையும் நடைமுறைகளையும் சீர்திருத்துதல், ஊழலையும் விரயத்தையும் ஒழிக்கும் அதேவேளை அமைச்சின் பணிகளை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தல்

3. பெண்கள் சாசனத்தை அமுலாக்குதல்

4. அரச அலுவல்கள் மற்றும் அரசியல் துறையில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உபாயங்களை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்

5. முரண்பாடுகள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்ககளை வலுவூட்டத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

6. பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை பலப்படுத்துதல் மற்றும் அமுல்படுத்துதல் 

7.  பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்

8. பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்

9.    மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் தொடர்பாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுதல்

10. முன்பள்ளிகளுக்கான தேசிய கொள்கையை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்

11. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆரோக்கியமான பிள்ளைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன் பிள்ளைப் பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்

12. பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துதல் 

13. சிறுவர் சாசனத்தை அமுல்படுத்துதல்

14. சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துதல்

15. செவன சரண வளர்ப்பு-பெற்றோர் திட்டத்தை அமுல்படுத்துதல்

16. விதிவிலக்கான திறமையான சிறுவர்களின் திறன்  அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குதல்


தொலைநோக்கு

ஒரு மேம்பட்ட சமூகம் அபிவிருத்தியின் முழுப் பயன்களையும் நியாயமாகவும் சமமாகவும் அனுபவித்ததல்.


செயற்பணி

சர்வதேச தரத்துடன் தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு பெண்கள், சிறுவர்கள், நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கிய மக்களின் பொருளாதார வலுவூட்டல், சமூக பாதுகாப்பு, சட்ட, நிறுவன மற்றும் மனிதவள சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்.   

   

அமைச்சின் வரலாறு
ஆண்டு
வர்த்தமானி
இலங்கையில் மகளிர் பணியகம் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழ் 1 வதாக ஸ்தாபிக்கப்பட்டது  
1978


இலங்கையில் மகளிர் பணியகம் மகளிர் அலுவல்கள் அமைச்சின் கீழ் மற்றும் போதனா வைத்தியசாலையின் கீழ் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது
1983

மகளிர் அலுவல்கள் அமைச்சு. (தனியான அமைச்சு)
1997

மகளிர் வலுவூட்டல் மற்றும் சமூக நல அமைச்சு
2004

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சு
2006

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு
2010

மகளிர் அலுவல்கள் அமைச்சு
2015

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
2015

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு
2019

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
2019

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு
2021

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
2022

           

logo