தேசிய பெண்கள் குழு
இலங்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் சாசனத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பெண்கள் தொடர்பான தேசிய குழு நிறுவப்பட்டது. இந்தக் குழு இலங்கைப் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை உருவாக்கம் மற்றும் தேசிய மட்ட மேற்பார்வையில் முன்னணி வகிபாகத்தைக் கொண்டுள்ளது.
அரசியல் மற்றும் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள், சட்ட ஆலோசனை / விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 1938 கட்டணமில்லா பெண்கள் உதவி சேவையை செயல்படுத்துதல் ஆகியவை தேசிய பெண்கள் குழுவின் முக்கியமான நிகழ்ச்சித்திட்டங்களாகும்.
எமது தொலைநோக்கு
சமத்துவத்தை உறுதி செய்யும் வன்முறையற்ற, பெண்கள் நட்புடன் கூடிய இலங்கை சமூகம்.
எமது செயற்பணி
இலங்கைப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், தரத்தை உறுதி செய்தல் மற்றும் அவர்களின் விரிவான அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்தல் மற்றும் முறையான அமுலாக்கம், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் உதவி செய்தல்.