சமீபத்திய செய்தி

தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு மூலம் அக்ரஹார விண்ணப்படிவம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

news-banner

தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு மூலம் அக்ரஹார விண்ணப்படிவம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அடுத்த நன்மை பெறுவதற்கான கோரிக்கைகளை அந்த விண்ணப்பத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை nitf.lk/en/downloads.html என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின்) 29.02.2024 ஆம்திகதிதொடக்கம் இந்த விண்ணப்பத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்றும், பழைய விண்ணப்பத்தின் ஊடாக சமர்ப்பிக்கும் கோரிக்கைகள் ஏற்கப்படாது என்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ரஹார காப்பீட்டுக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது, தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் இணையதளத்தைச் சரிபார்த்து, அங்கு குறிப்பிடப்படுகின்றவாறு உங்கள் தேவைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களின் சான்றுப்படுத்திய பிரதிகள் மற்றும் உரிய சிட்டைகளின் மூலப் பிரதிகளுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை விண்ணப்பத்தை தாமதமின்றி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ஆவணங்களின் குறைபாடுகள் மற்றும் தாமதங்களுடன் சமர்ப்பிப்பதன் காரணமாக ஏற்படும் நிராகரிப்புகளுக்கு அமைச்சு பொறுப்புக் கூறாது. 

 https://nitf.lk/en/downloads.html

logo