சமீபத்திய செய்தி
9 ஆவது பொதுநலவாயப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் (CWP) மாநாடு
பொதுநலவாயப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ((CWP)மாநாடு இந்த மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பார்படோஸில், பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாட்டுடன் (CPC) இணைந்து நடைபெற்றது. இந்த ஆண்டு பொதுநலவாய மாநாட்டின் ஒன்பதாவது நிகழ்வாகும். இது 'பெய்ஜிங் +30 முதல் பாராளுமன்றங்கள்: முன்னேற்றம், சவால்கள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கான முன்னோக்கிய பாதை' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இது 1995 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக பெண்கள் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) ஏற்றுக்கொள்ளப்பட்ட பெய்ஜிங் பிரகடனத்தின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்த மாநாட்டைப் பொதுநலவாயப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் கௌரவ டாக்டர் ஜைனாப் கிம்பா, எம்.பி., நைஜீரியாவின் தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. பொதுநலவாய மாநாட்டின் தலைவர் (2025), பார்படோஸின் எம்.பி., கௌரவ மார்ஷா கே. ஏ. கேடில். பாராளுமன்ற உறுப்பினராகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பால்நிலைச் சமத்துவத்திற்கான கரீபியன் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வாதத்தை வலியுறுத்திக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்த அமர்வுகளின் போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொதுநலவாயப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்த ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினரும் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் ஒன்ராறியோ கிளையின் பிரதிநிதியுமான கௌரவ கேத்தரின் ஃபைப் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்மாநாட்டில் சமகாலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பாராளுமன்றத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான அமர்வுகள் மற்றும் பயிற்சிகளும் இடம்பெற்றன.
இம்மாநாட்டில் சமகாலப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்குப் பாராளுமன்றத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான அமர்வுகள் மற்றும் பயிற்சிகளும் இடம்பெற்றன.
மாநாட்டில் கலந்து கொண்ட 100 இற்கும் மேற்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான இலங்கைக் குழுவும் பிற பிரதிநிதிகளுடன் பங்கேற்றது.