சமீபத்திய செய்தி

பொதுநலவாய பாராளுமன்றக் கூட்டமைப்பின் (CPA) ஆசியப் பிராந்திய நிர்வாகக் குழு

news-banner

சமீபத்தில் இடம்பெற்ற பொதுநலவாய பாராளுமன்றக் கூட்டமைப்பின் (CPA) ஆசியப் பிராந்தியத்திற்கான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

CPA ஆசியப் பிராந்தியத்தில் பங்களாதேஷ், மாலைதீவு, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் அதன் நான்கு பிராந்தியரீதியான அவைகளையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை ஆசியப் பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தது, 2025ஆம் ஆண்டுடன் அக்காலப்பகுதி நிறைவுற்றது.

அடுத்ததாக தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியது பங்களாதேஷ் என்றாலும், அந்த நாட்டில் தற்போது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் இல்லாத காரணத்தினால், தேர்தல் மூலம் அந்தப் பொறுப்பு மாலைதீவிற்கு வழங்கப்பட்டது.

அதன்படி, மாலைதீவு பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் திரு. அஹ்மத் நசீம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பினை வகிக்கவுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற செயலாளர் மற்றும் CPA ஆசியப் பிராந்திய செயலாளர் திருமதி.குஷாணி ரோஹனதீர, குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசியப் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.