சமீபத்திய செய்தி

“வாழ்வுக்கு பலம்” வீட்டுத்திட்டம் 2026

news-banner

நான்கு பிரதான கொள்கைத்தூண்களின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட "வளமான நாடு - அழகான வாழ்க்கை" தேசிய கொள்கைக் கட்டமைப்பின் முக்கிய கொள்கைத்தூண்களில் ஒன்று ஒவ்வொரு குடிமகனுக்கும் "கௌரவமான வாழ்க்கை - பாதுகாப்பான நாடு" என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

இக்கொள்கைப் பொறுப்புக்கூறலுக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட யோசனைகளில்> வாழ்க்கையின் ஏதேனுமொரு கட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வாழ்ந்து சமூகமயமாக்கப்பட்டவர்களுக்கும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய சிறுவர்களின் குடும்பங்களுக்கும் காணி கொள்வனவு செய்து வீடு கட்டுவதற்கும் தமக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுவதற்கும் அல்லது தற்போதுள்ள வீட்டைப் புனரமைப்பதற்கும் 02 மில்லியன் ரூபாய் நிதி மானியத்தை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1747 பயனாளிகளின் விண்ணப்பங்கள் ,e;j mikr;Rf;F கிடைத்துள்ளதுடன் அவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு காணிகள் இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரச காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் தொடர்புடைய நிறுவனங்களிடம் வினவப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணி ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அமைச்சின் மற்றும் நிறுவனங்களின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித் தனி வீடுகள் அல்லது அடுக்குமாடித் தொகுதிகளை நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான காணிகள் இருப்பின் அக்காணிகளை அடையாளம் கண்டு எமது அமைச்சிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், இப் பயனாளிக் குழுவைச் சேர்ந்த நபர்கள் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியிருந்து 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் சமூகமயமாக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுள் பெரும்பாலானோருக்குத் சொந்தக் காணி உரிமை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகளPர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “tho;tpw;F gyk;”வீட்டுத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனப் பராமரிப்பிற்குப் பின் சமூகமயமாக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய சிறுவர்கள் உட்பட 112 பயனாளிகளுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் நிதி உதவியின் முதலாவது தவணைக்கான காசோலைகளை கௌரவ ஜனாதிபதி அவர்களால் வழங்கும் நிகழ்வு 2026 செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குத் தங்களது சொந்த வீட்டை அமைத்துக் கொள்ளும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணி உரிமையுடன் ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள மேலும் பல பயனாளிகளுக்கு வீடுகளை அமைப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை விரைவாக வழங்குவதற்கும் மேல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.